ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் சரிந்து விழுந்த மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்
இன்னிலையில் ஹட்டன், வட்டவளை, தியகல மற்றும் கலுகல ஆகிய பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
தற்போது, பாதையைத் திறக்கத் தேவையான பணிகள் அதிக எண்ணிக்கையிலான பேக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், சாலையில் மேலும் மண்சரிவுகள் ஏற்படுமா என்பது குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.












