பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் இடையில் வெளிவிவகார அமைச்சில் அண்மையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை தொடர்ந்து உடனடியாக ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கியமைக்காக வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினருக்குத் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார்.
வரலாற்றில் அண்மைய ஆண்டுகளில் இலங்கை சந்தித்த மிகவும் கடுமையான அனர்த்தங்களில் ஒன்றை எதிர்கொண்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்
அனர்த்தத்தின்போது சுற்றுலாப் பயணி எவரும் பாதிக்கப்படவில்லை என்றும், முன்னர் அணுக முடியாத பகுதிகளையும் இப்போது அடைய முடிந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்
அனர்த்தங்களி;ன் பின்னர் மீண்டும் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தப் பாரிய சுத்திகரிப்பு மற்றும் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பாடல்கள் சீர் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
மீட்பு, அப்புறப்படுத்தல் மற்றும் அவசர உதவிகள் ஆகியவை முப்படையினர், பொலிஸ், அரச அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் மேற்கொள்ளப்பட்டதாகப் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
உட்கட்டமைப்பை மறுசீரமைத்தல், மீள்குடியேற்றத் தேவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடுகள் மற்றும் தொழில்நுட்ப, மனிதாபிமான மற்றும் நிதி உதவிகளுக்கும் பிரதமர் பாராட்டுதல்களை தெரிவித்தார்
இதேவேளை பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு உடனடி நிவாரண திட்டங்கள் மற்றும் நீண்டகால மறுசீரமைப்பு ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு உதவுவதற்கு தமது அரசாங்கங்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்














