டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ் நாடு அரசாங்கமும் நிவாரண உதவிகளை அனுப்பி வைத்துள்ளது.
இதேவேளை, 950 தொன் நிவாரண பொருட்கள் இவ்வாறு தமிழ் நாடு மக்கள் சார்பாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நிவாரணப் பொருட்களை தாங்கி வரும் கப்பலை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று (6) கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்களில் 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 000 வேஷ்டி, 5 000 சேலை, 1,000 தார்பாலீன் ஆகியவையும், 650 டன் பருப்பு, சர்க்கரை, பால்மா பொதிகள் ஆகியவையும் உள்ளடங்குகின்றன.
தூத்துக்குடியில் இருந்து 300 தொன் பருப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை அனுப்பப்படுகிறது.












