சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இலங்கை விமானப்படையினரும் ஒத்துழைப்பு வழங்கிவரும் நிலையில் இன்று பல பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
இதற்கமைய கொத்மலை, அஸ்கிரிய, கம்பளை, நியங்கந்தோர, இங்குருகல மற்றும் உடுதும்பர ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்டன
இலங்கை விமானப்படையின் பெல் 412, பெல் 212, ஆஐ17 மற்றும் லு12 ஆகிய விமானங்கள் இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டன.












