அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் திருகோணமலை மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அதனை இணைக்கும் பணி இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இந்த நடவடிக்கைக்காக திணைக்கள ஊழியர்கள் படையினர், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.













