பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தீர்மானத்தை மாற்றியுள்ளார்.
மேலும் மூன்று வடிவ கிரிக்கெட் பேட்டிகளிலும் தொடர்ந்து விளையாட விரும்புவதாகக் கூறியுள்ளார்.
ஷகிப் ஒரு வருடத்திற்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை, கடந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (07) அவர், நான் அதிகாரப்பூர்வமாக அனைத்து வடிவ போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவில்லை.
பங்களாதேஷுக்கு திரும்பிச் சென்று, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு முழுத் தொடரை விளையாடி ஓய்வு பெறுவதே எனது திட்டம் – என்று கூறினார்.
2024 ஆகஸ்ட் 5 ஆம் திகதி பங்களாதேஷின் அவாமி லீக் அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், மே 2024 முதல் ஷகிப் பங்களாதேஷுக்கு திரும்பவில்லை.
ஷகிப் அந்தக் கட்சியின் எம்.பி.யாக இருந்தார்.
அந்த நேரத்தில் அவர் நாட்டில் இல்லை என்றாலும், கொலைக் குற்றச்சாட்டில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பின்னர் அவர் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார்.
கான்பூரில் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியே அவரது கடைசி சர்வதேச ஆட்டமாகும்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் கான்பூர் டெஸ்டுக்கு முன்னதாக, ஷகிப் இனி டி20 போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்று அறிவித்தார்.
அதே நேரத்தில் ஒக்டோபரில் திட்டமிடப்பட்டிருந்த சொந்த நாட்டில் தென்னாப்பிரிக்கா தொடரில் தனது கடைசி டெஸ்டில் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
டெஸ்ட் தொடருக்கு முன்னதாக டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தைச் சுற்றி சில போராட்டங்கள் மற்றும் மோதல்கள் நடந்தன, அதன் பிறகு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்க வழிவகுத்த மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தின் போது மௌனம் காத்ததற்காக ஷகிப் மன்னிப்பு கேட்டார்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஷகிப்பை நீக்கியது, முக்கியமாக பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்தால் அவர் நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்ய முடியவில்லை என்பதால்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஷகிப் பங்களாதேஷ் அணிக்குத் திரும்புவது வரவேற்கத்தக்கது என்று அந்நட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
செப்டம்பரில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிறந்தநாளுக்கு ஷகிப் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, அவர் நாட்டிற்காக விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என்று பங்களாதேஷ் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் மஹ்மூத் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.













