அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளுக்குச் செல்வது மிகவும் ஆபத்தானது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் ‘117’ என்ற துரித இலக்கம் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கனமழை காரணமாக மண் ஈரப்பதத்துடன் உள்ளமையினால் விழிப்புடன் இருக்குமாறும், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் போதெல்லாம் உடனடியாக குறித்த இடங்களை விட்டு வெளியேறுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
அதேநேரம், இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த நிவாரணக் குழுக்கள் செய்து வரும் பணிகளைப் பாராட்டிய அவர், அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.













