நவம்பர் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த நான்கு வாரங்களில் பிரித்தானியாவின் மளிகைப் பொருட்கள் மீதான பணவீக்கம் 4.7 சதவீதத்தில் நிலையான நிலையில் இருந்ததாக இங்கிலாந்து தொழில்துறை தரவுகள் இன்று சுட்டிக்காட்டின.
பொதுமக்களின் ஒட்டுமொத்த பணவீக்க எதிர்பார்ப்புகளை வடிவமைப்பதில் உணவுப் பொருட்களின் விலைகள் பெரும் பங்கு வகிக்கின்றன என்று நம்புவதால், இங்கிலாந்து வங்கி அவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
சாக்லேட் மிட்டாய் பொருட்கள், புதிய இறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் வேகமாக உயர்ந்து வருவதாகவும், சர்க்கரை மிட்டாய் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, நான்கு வாரங்களில் இங்கிலாந்து மளிகை விற்பனை 3.4% அதிகரித்துள்ளன.
கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்குவதால் டிசம்பரில் விற்பனை 13.6 பில்லியன் பவுண்ட்ஸை தாண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சில்லறை விற்பனையாளர்கள் விற்பனையை ஊக்குவிப்பதற்காக விளம்பரங்களில் முதலீட்டை அதிகரித்து வருகின்றனர்.












