அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் உயிர்போகும்வரை தூக்கில் இடப்பட்டதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
சீனா ஹூவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக ‘சீனா ஹூவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் செயற்பட்டு வருகின்றது.
இதன் முன்னாள் அதிகாரியான பாய் தியான்ஹய் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அபவிருத்தி திட்டங்களின்போது, சுமார் 15.6 கோடி டெலர் மதிப்பிலான நிதியை இலஞ்சமாக பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழிக்கில் சந்தேக நபர் குற்றவாளினாக இனங்காணப்பட்ட நிலையில் நீதிமன்றம் மரண தண்டனை வித்தித்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய நேற்றையதினம் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி துக்கில் இடப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் கடந்த மே மாதமே அவருக்கு மரணதண்டனை வித்தித்து தீர்ப்பளித்திருந்தது. எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக சந்தேக நபர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் உயர்நீதிமன்றமும் மரணதண்டனையை உறுதி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று காலை பாய் தியான் ஹய், அவரது குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் உயிர்போகும்வரை துக்கிலடப்பட்டுள்ளார்.













