இப் பருவ காலத்திற்கான FORMULA ONE CHAMPION யார் என்பதை தீர்மானிக்கும் கடைசிப்போட்டி அபுதாபியில் நடைபெற்றது. 24 கட்டங்களை கொண்ட இத் தொடரில் இதுவரையில் செம்பியன் யார் என்பதை கணிக்க முடியாமல் மூவருக்கிடையில் பலத்த போட்டி நிலவியது.
அதிலும் நொரிஸ் மற்றும் வெஸ்டாபனுக்கிடயில் 8 புள்ளிகள் மாத்திரமே வித்தியாசம் காணப்பட்டது. இன்றைய போட்டியில் நொரிஸ் வெற்றிப்பெற்றால் சம்பியன் மாறாக வெஸ்டாபன் வெற்றிப்பெற்று நொரிஸ் முதல் 3 இடங்களுக்குள் வந்தால் புள்ளிகள் அடிப்படையில் நொரிஸ் சம்பியன் என்ற ரீதியில் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்த ஒரு போட்டியாக ஆரம்பமாகியது அபுதாபி குரோன்ப்ரீ.

58 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப்போட்டியில் ஆரம்பமே வெஸ்டாபன் முதலிடத்தில் தொடர அவரை முந்திசெல்ல பின் தொடர்ந்தார் நொரிஸ், பியாஸ்ட்ரி 3மிடத்தில் பயணித்தார். முதல் 3 பேருக்கும் வெற்றிவாய்ப்பு இருந்ததால் ஆரம்பதலே பலத்த போட்டி நிலவியது.
4வது சுற்றில் வைத்து பியாஸ்ட்ரி 2மிடத்திலும் நொரிஸ் 3மிடத்திலும் காணப்பட்டனர். 13வது இடத்திலிருந்த ஹெமில்டன் முன்னோக்கி செல்ல தனது வேகத்தை அதிகரித்தார். இன்னொரு பக்கம் அலோன்சோவை பின்னுக்கு தள்ளி ரஸ்ஸல் 5ம் இடத்திற்கு முன்னேறி அசத்தினார். அதேநேரம் லெக்லெர்க் நொரிஸ் முந்திசெல்ல வேகமாக தனது வாகனத்தை செலுத்தினார்.
17வது சுற்றில் வைத்து நொரிஸ் பிட்ஸ்டொப்பிற்கு வந்தார். அவரை பின்தொடர்ந்து லெக்லெர்க் அலோன்சோ என அடுத்தடுத்து பிட்ஸ்டொப்பிற்கு வந்தனர். இருந்தும் நொரிஸ் 7மிடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
18வது சுற்றில் வைத்து வெஸ்டாபன் முதலிடத்தில் தொடர்ந்தும் பயணித்துக்கொண்டிருந்தார். 19வது சுற்றில் வைத்து நொரிஸ் சிறப்பாக செயற்பட்டு 5மிடத்திற்கு முன்னேறி வந்தார்.
இந்நிலையில் 20வது சுற்றில் வைத்து நொரிஸட 6மிடத்திற்கு பின்தள்ப்பட்டதுடன் வெஸ்டமாபனை முந்திசெல்ல பியாஸ்ட்ரியும் அருகில் வந்தார்.
23வது சுற்றில் வைத்து நொரிஸ் 4மிடத்திலும் யுகி சுனேடா 3மிடத்திலும் சென்றுக்கொண்டிருந்தனர்.நொரிஸ் தனது 3மிடத்தை பெற்றுக்கொள்ள கடுமையாக போராடினார். நொரிஸ் தனது வேகத்தை அதிகரித்ததுடன் 3மிடத்திற்கும் முன்னேறி அசத்தினார்.
24வது சுற்றில் வைத்து தனது முதல் பிட்ஸ்டொப்பிற்கு வந்தார் வெஸ்டாபன். இதனால் பியாஸ்ட்ரி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.
பின்னர் 41வது சுற்றில் வைத்து நொரிஸ் தனது கடைசி பிட்ஸ்டொப்பையும் பயன்படுத்தினார். இதன்பிறகு தனது முழூபலத்தையும் காண்பிக்க தயாரானார் அதேநேரம் மீண்டும் பியாஸ்ட்ரியை பின்னுக்கு தள்ளி வெஸ்டாபன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.இதனால் அடுத்த சுற்றில் பியாஸ்ட்ரியும் பிட்ஸ்டொப்பிற்கு வந்தார்.
52வது சுற்றில் வைத்து முன்னாள் சம்பியன் ஹெமில்டன் 7மிடத்திற்கு முன்னேறினார்.இருந்தும் அதே தருணத்தில் அவர் பின்தள்ளப்பட்டார். இந்நிலையில் போட்டியில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இதனால் 58 சுற்றுக்கள் முடிவில் 1 மணித்தியாலம் 26 நிமிடங்கள் 07 செக்கன்களில் போட்டி தூரத்தை நிறைவு செய்து வெஸ்டாபன் முதலிடத்தை பெற்றுக்கொண்டார் இது இப்பருவகாலத்தில் அவரது 8வது வெற்றியாக பதிவானது.
பியாஸ்ட்ரி 2மிடத்திலும் நொரிஸ் 3மிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதனால் நொரிஸ் 15 புள்ளிகளை பெற்றுக்கொண்டதுடன் ஒட்டுமொத்தமாக 423 புள்ளிகளுடன் 2025ம் ஆண்டிற்கான FORMULA ONE CHAMPION ஆக லென்டோ நொரிஸ் மாற்றம் பெற்றார். அவருக்கும் இரண்டாமிடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் மெக்ஸ் வெஸ்டாபனுக்கும் இரண்டு புள்ளிகள் மாத்திரமே வித்தியாசம் காணப்பட்டது.
தனது FORMULA ONE வரலாற்றில் முதல் முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் நொரிஸ் என்பதும் குறிப்பிடதக்கது. கண்ணீருடன் தனது வெற்றியை பெற்றோருக்கு சமர்பித்ததுடன் மெக்லாரன் அணிக்கு பெருமையைபும் தேடி கொடுத்தார்.

















