இலங்கையின் உட்கட்டமைப்பு மீட்சிக்கு உதவும் வகையில் ரஷ்யாவின் சிறப்பு விமானமொன்று 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
விமானத்தில் நடமாடும் மின் நிலையம், மரக்கறி எண்ணெய், சர்க்கரை, அரிசி மற்றும் கூடாரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இலியுஷின் IL -76 என்ற மிகப்பெரிய விமானம் பிற்பகல் 1 மணியிளவில் கொழும்பை வந்தடைந்தது.
இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதர் லெவன் ஜார்ஜியன், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் லிமிடெட்டின் தலைவர் ஏர் வைஸ்
மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம ஆகியோர் விமான நிலையத்திற்கு சென்று பொருட்களை பெறுப்பேற்றிருந்தனர்.















