• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அனர்த்தத்தின் பின்னர் பெண்கள் , குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பு-   மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/10
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

அனர்த்தத்தின் பின்னரான காலத்தில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சானது உதவி வழங்குவதைத் தாண்டிய ஒரு அசாதாரணமான பொறுப்பைக் கொண்டுள்ளது.

அப்பொறுப்பானது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் (விசேடமாக பெண்களும் சிறுவர்களும்) பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும், அவர்களை உளவியல் ரீதியாக பலப்படுத்துவதுமாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

blank

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னரான நிலைமையில் அமைச்சின் தொடர்ச்சியான இடையீடுகளை மீளாய்வு செய்வதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் மற்றும் பிரதி அமைச்சர், கலாநிதி நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் கூட்டப்பட்ட பிரிவுத் தலைவர்களின் அவசரக் கூட்டத்தில் அமைச்சர் இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

எமது அமைச்சின் கீழ், பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் என அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பலமான உளவியல்ரீதியான ஆற்றுப்படுத்தற் சேவை உள்ளது.

இந்தச் சமூகங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான மனரீதியான தயார்நிலையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் இவ் ஆற்றுப்படுத்தற்சேவையானது அதிகபட்சம் செயற்பட வேண்டும்.

முன்னர் தமது வீடுகளில் தமது குடும்பங்களின் பாதுகாப்பில் வாழ்ந்த சிறுவர்கள் இப்போது அந்தப் பாதுகாப்பான இடத்தை இழந்திருக்கலாம். தமது கணவன்மார்களுடன் வாழ்ந்த பெண்கள் தமது துணையை இழந்திருக்கலாம். வரும் நாட்களில், சரியான பாதுகாவலர் அற்ற சிறுவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், மற்றும் தமது தாயை இழந்து இப்போது தமது தந்தையின் தனிக் கண்காணிப்பில் இருக்கும் பாதிப்புக்குள்ளான சிறுவர்கள் போன்றோரை நாம் இப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சந்திக்க நேரிடலாம். எனவே, நாம் இவ்வாறான பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மாகாண நன்னடத்தை திணைக்களங்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். கள உத்தியோகத்தர்கள் ஏற்கனவே மிகச்சிறந்த அளவில் பணிகளைச் செய்து வருகின்றனர்.

இத்தருணத்தில், அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு அப்பால், அவர்கள் தமது மாவட்டங்களிலும், பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் துறை வேறுபாடின்றி அயராது செயற்படவேண்டியுள்ளது. நாம் இதனை மதிப்பீடு செய்து, எமது அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் தமது பணிச்சுமையினை உரியவாறு பகிர்ந்து மேற்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்க வேண்டும்.

இதற்கிடையில், அவர்களின் சுகாதார நிலைமைகளையும், அவர்களின் சொந்தக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் அனர்த்த நிலைமைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தருணத்தில் நாம் செய்யக்கூடிய அனைத்தையும் உத்தியோகபூர்வ கடமையாக மட்டுமின்றி, தேசிய மற்றும் சிவில் பொறுப்பாகவும் கருத வேண்டும்.

இதேவேளை, மேற்கொள்ளப்படுகின்ற நலன்புரி நடவடிக்கைகள், தரவு சேகரிப்பு முயற்சிகள், மற்றும் விசேட சூழ்நிலைகளின் முகாமைத்துவம் ஆகியவை எந்தளவிற்கு முன்னேறியிருக்கின்றன என்பதை பிரிவுத் தலைவர்கள் இதன்போது முன்வைத்தனர்.

இம்முயற்சிகளை மேலும் பரந்தளவிலானதாகவும், அதிக செயற்திறன் மிக்க செயன்முறையாகவும் மாற்றுவதற்குத் தடையாக இருக்கும் காரணிகளை அடையாளம் காண்பது குறித்தும், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகளை ஆராய்வது குறித்தும் இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.

அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்ரமசிங்க, மற்றும் அமைச்சினதும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் நிறுவனங்களினதும் பிரிவுத் தலைவர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Related

Tags: Saroja Savithri Paulrajsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை

Next Post

தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

Related Posts

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!
இலங்கை

2026-01-12
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

2026-01-12
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு
இலங்கை

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

2026-01-12
தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு
இலங்கை

14 வயது சிறுவனின் மர்ம மரணம்

2026-01-12
இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

2026-01-12
Next Post
தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

தீபாவளி பண்டிகைக்கு யுனஸ்கோ கொடுத்த அங்கீகாரம்!

மீள் திரையிடப்படவுள்ள படையப்பா – முன் பதிவில் அள்ளும் வசூல் !

மீள் திரையிடப்படவுள்ள படையப்பா - முன் பதிவில் அள்ளும் வசூல் !

உதய கம்மன்பில  தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி - கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் - உதய கம்மன்பில !

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

கிளிநொச்சி முரசுமோட்டை – நான்காம் கட்டை பகுதியில் விபத்து – நால்வர் உயிரிழப்பு!

0
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

வெலிமடை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0
புதுமண தம்பதி உட்பட விபத்தில் சிக்கிய 7 பேர் உயிரிழப்பு

அநுராதபுரம் – ஓயாமடுவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்கா விலகல்

கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.