லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) ஆறாவது சீசன், இசை, வாணவேடிக்கைகள் மற்றும் ஒரு மாபெரும் மறுபோட்டியுடன் தொடங்கவிருந்தது.
கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி சீசனின் இறுதிப் போட்டியின் மறு ஆட்டமாக, நடப்புச் சாம்பியனான ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியும் காலி கலன்ட்ஸ் (Galle Gallants) அணியும் தொடக்க ஆட்டத்தில் மோதவிருந்தன.
இருப்பினும், இப்போட்டி ஒரு பொலிஸ் நடவடிக்கையுடன் தொடங்கியது.
அதன்படி, ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளார்.
போட்டி முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்ததாகக் கூறப்படும் ஆட்டநிர்ணய சதி விவகாரம் (match-fixing) தொடர்பாக, விளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, மைதானப் பணியாளர்கள் மற்றும் ஊடகப் பிரிவு ஆகியவற்றின் வாயிலாக இத்தகவல் பரவியது.
பொலிஸார் இதுவரை அவரது பெயரை வெளியிடவில்லை; விளையாட்டில் நிலவும் ஊழல் தொடர்பான விரிவான விசாரணையின் ஒரு பகுதியாகவே இது மேற்கொள்ளப்பட்டதாகவும், விசாரணை முன்னேறும்போது கூடுதல் விவரங்கள் பகிரப்படும் என்றும் மட்டுமே அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஒரு கிரிக்கெட் விளையாடும் நாடு, மேலும் விளையாட்டில் நடக்கும் ஊழலைக் குறிப்பாகக் குறிவைக்கும் கடுமையான குற்றவியல் சட்டங்களைக் கொண்டுள்ளது.
2019-ல் அறிமுகப்படுத்தப்பட்ட, விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் சட்டம், ஆட்ட நிர்ணய சதி, உள்ளகத் தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பிற வகையான முறைகேடுகளைக் குற்றமாக்குகிறது.
குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்குப் பெரும் அபராதங்களும், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
தற்போதைய நிலையில், இந்த கைது நடவடிக்கை LPL தொடரைப் பாதிக்கவில்லை.
இருப்பினும், LPL வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்தும், தொடர்ந்து களத்திற்கு வெளியிலான சர்ச்சைகளில் சிக்கி வரும் ஜப்னா கிங்ஸ் அணியின் மீது இது மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளது.
2025-இல் இந்த அணியின் உரிமையாளர் பொறுப்பில் மாற்றம் ஏற்பட்டது.
அதற்கு அமைவாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2026-ஆம் ஆண்டுக்கான சீசனுக்கு முன்னதாக ஒரு புதிய உரிமையாளர் குழு பொறுப்பேற்றமையும் குறிப்பிடத்தக்கது.










