‘GOAT TOUR’ எனப்படும் மூன்று நாள் கொண்டாட்டத்திற்காக ஆர்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியா பயணிக்கிறார்.
எதிர்வரும் டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நான்கு நகரங்களை (கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை, டெல்லி) உள்ளடக்கிய முழுமையான பயண அட்டவணையில் மெஸ்ஸி இந்தியாவுக்கு பயணம் செய்கிறார்.
இந்த வார தொடக்கத்தில் தனது தொழில் வாழ்க்கையின் 48 ஆவது கிண்ணத்தை வென்ற புகழ்பெற்ற ஆர்ஜென்டீனா வீரர், தனது பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பல பிரபலங்களையும் சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.
GOAT சுற்றுப் பயணத்தின் போது மெஸ்ஸி பொதுவில் தோன்றும் நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் விற்பனை செய்யப்படுகின்றன.
பெரும்பாலான நகரங்களில் டிக்கெட் விலை சுமார் 4,500 இந்திய ரூபாவில் இருந்து தொடங்குகிறது.
டிக்கெட் விலையில் மும்பை சுற்றுப்பயணம் மட்டுமே விதிவிலக்கு, அங்கு அதன் விலை 8,250 ரூபாவில் தொடங்குகிறது.
கொல்கத்தாவில் ஆரம்பமாகும் மெஸ்ஸியின் டிசம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் GOAT சுற்றுப்பயணமானது டிசம்பர் 15 ஆம் திகதி புது டெல்லியில் நிறைவு பெறும்.
அங்கு மெஸ்ஸி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அருண் ஜெட்லி மைதானத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்வார்.

















