கோவாவின் பிர்ச் ஹோட்டலில் ஏற்பட்ட துயர தீ விபத்து தொடர்பாக தேடப்படும் லுத்ரா சகோதரர்களான கௌரவ் லுத்ரா மற்றும் சவுரப் லுத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவும் தாய்லாந்தும் 2013 ஆம் ஆண்டு முதல் நாடுகடத்தல் ஒப்பந்தம் ஒன்றைக் கொண்டுள்ளன.
நிதிக் குற்றங்களுக்காகத் தேடப்படுபவர்கள் உட்பட, தப்பியோடிய குற்றவாளிகளை நாடுகடத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உறுதியான சட்ட கட்டமைப்பை வழங்குகிறது.
தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை மாற்றுவது தொடர்பான ஒப்பந்தமும் இரு நாடுகளுக்கும் இடையே 2012 முதல் நடைமுறையில் உள்ளது.
கோவா பொலிஸாரின் கூற்றுப்படி, அதிகாரிகள் தீயை அணைக்க போராடி சிக்கிய விருந்தினர்களை மீட்டபோது, நாட்டை விட்டு தப்பிச் சென்றதற்காக சகோதரர்கள் மீது டிசம்பர் 7 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தலைமறைவான குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக இன்டர்போல் பிறப்பித்த உத்தரவினை தொடர்ந்து, தாய்லாந்து அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களை தாய்லாந்தில் கைது செய்தனர்.
கடந்த டிசம்பர் 6 ஆம் திகதி கோவாவின் பிர்ச் ஹோட்டலில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து சுற்றுலாப் பயணிகள், 20 ஊழியர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.
இந்த உணவகம் கௌரவ் லூத்ரா மற்றும் சவுரப் லூத்ரா ஆகியோருக்குச் சொந்தமானதாகும்.
















