அர்ஜென்டினா ஜனாதிபதி ஜாவியர் மைலியின் சமீபத்திய கருத்துக்களுக்கு இங்கிலாந்து அரசு பதிலளித்துள்ளது.
அதன்படி, அர்ஜென்டினாவுக்கு ஆயுத ஏற்றுமதி மீதான தடையை நீக்குவது குறித்து இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெரிவித்த மைலியின் கூற்றை இங்கிலாந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
இதேவேளை, (Falklands) ஃபாக்லாந்து போருக்குப் பின்னர் நடைமுறையில் உள்ள இந்தத் தடை, அர்ஜென்டினாவின் இராணுவத் திறனை மேம்படுத்தக்கூடிய ஆயுதங்களுக்கு பொருந்தும்.
மேலும்,(Falklands) ஃபாக்லாந்து தீவுகளின் இறையாண்மை ஒருபோதும் பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்றும், தீவு மக்கள் 2013-ஆம் ஆண்டில் இங்கிலாந்துடன் இருக்க வாக்களித்ததாகவும் இங்கிலாந்து தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், வர்த்தகம் மற்றும் கலாச்சாரம் போன்ற துறைகளில் அர்ஜென்டினாவுடன் கூட்டுறவை ஆழப்படுத்த இங்கிலாந்து விரும்புவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, அர்ஜண்டினா ஜனாதிபதி மைலி அடுத்த ஆண்டு இங்கிலாந்துக்கு வந்து அங்குள்ள அரசியல் தலைவர்களை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.




















