டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ ’ நிதியத்திற்கு Memon Association of Sri Lanka சங்கம் 20 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
இதற்கான காசோலையை, அதன் தலைவர் Abdul Razzle Abdul Sattar ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் இணைந்து தமது தனிப்பட்ட நிதியிலிருந்து 3.6 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இந்தோனேசியத் தூதுவர் Dewi Gustina Tobing இதற்கான காசோலையை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளித்தார்.
‘Rebuilding Sri Lanka நிதியத்திற்கு Maga Engineering (Pvt) Ltd நிறுவனம் 25 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.
இதற்கான காசோலையை நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் எம். பியதாச, ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார்.

‘‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குPeople’s Leasing & Finance PLC இனால் 7.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும் ,People’s Insurance PLC இனால் 2.5 மில்லியன் ரூபா நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது.


இதேவேளை Rebuilding Sri Lanka’ ’ நிதியத்திற்கு Thilakawardena Textile (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
காசோலையை Thilakawardena Textile (Pvt) Ltd இன் தலைவர் சுனில் திலகவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

















