இங்கிலாந்து இராணுவத்தின் புதிய அஜாக்ஸ் கவச வாகனத்தில் பல பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையினால் அங்கு தொழில் புரியும் சோதனையாளர்கள் உடல் ரீதியாக பல சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை, 2019 முதல் 2021 வரை வாகனத்தை சோதிக்கும் பிரிவுக்குத் தலைமை தாங்கிய முன்னாள் லெப்டினன்ட் கர்னல் (Rob Page) ராப் பேஜ் என்பவர், தனது பணியால் 20% செவித்திறனை இழந்ததாகச் சந்தேகம் தெரிவிக்கிறார்.
அவர் சோதனை காலத்தின்போது அதிகப்படியான சத்தம் காரணமாக வீரர்களுக்கு செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டதையும், மேலும் அதிக அதிர்வுகள் காரணமாக கைகள், மணிக்கட்டுகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் வரை சோதனைகளை நிறுத்த அவர் 2020 மற்றும் 2021-ல் பரிந்துரைத்த போதிலும், சமீபத்தில் மேலும் பல வீரர்கள் காயமடைந்துள்ளதால் வாகனத்தின் பயன்பாடு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, பேஜ், வீரர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

















