துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமையினால்
பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு 172 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த விமானி துபாய் விமான நிலையத்திற்கு தகவல் வழங்கிய நிலையில் விமானத்தை தரையிறக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
பின்னர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பயணிகள் 172 பேர் கடும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் பயணிகள் அனைவருக்கும் மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
















