எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.
பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இற்கு அமைவாக சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்றையதினம் (12) வெளியிடப்பட்டுள்ளது.















