கார்ஃபில்லி தோட்டத்தில் நெல்சன், ஹீல் ஃபாவரில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை மாலை 6.10 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன,
இதையடுத்து குவென்ட் காவல்துறை மற்றும் தெற்கு வேல்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நெல்சன், ஹீல் ஃபாவரில் உள்ள இரண்டு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் இரண்டு பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் காரணமாக சாலை மூடப்பட்டுள்ளது,
மேலும் சம்பவ இடத்திலேயே தடயவியல் குழுக்கள் நேற்று முழுவதும் விசாரணையைத் தொடர்ந்தன.
இச்சம்பவத்தால் சாளரங்கள் உடைந்தும், சுவரில் எரிந்த அடையாளங்களும் இருந்ததாக அயல் வீட்டார் விளக்கினர்.
இதேவேளை, பிவெடிப்பு இடம்பெற்றதற்கான கரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் போலீசார் விசரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




















