WWE தொழில் மல்யுத்த உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான 48 வயதுடைய ஜோன் சினா , தனது 23 ஆண்டுகால
வாழ்க்கையிலிருந்து இன்றுடன் அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார்.
தனது கடைசிப் போட்டியில், பலம் வாய்ந்த வீரர் 38 வயதுடைய குந்தரிடம் , ‘ஸ்லீப்பர் ஹோல்ட்’ (Sleeper Hold) சப்மிஷன் முறையில் சரணடைந்து அவர் விடைபெற்றார்.
இது ஜோன் சினா தனது WWE வாழ்க்கையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு போட்டியில் சரணடையும் முதல் சந்தர்ப்பமாகும்.
வொஷிங்டனில் நடந்த இந்தப் போட்டியில், உணர்ச்சிப் பெருக்குடன் ரசிகர்கள் Thank You Cena என்று முழக்கமிட்ட நிலையில் அவர் விடைபெற்றார்.
WWE வரலாற்றில் 17 முறை உலக செம்பியன் பட்டம் வென்ற வீரரான ஜோன் சினா, ஓய்வுக்குப் பின் திரைப்படத் துறையில் முழு கவனம் செலுத்த உள்ளதோடு, WWE-ன் தூதுவராகவும் செயல்பட ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















