பலங்கொடை, சமனலவெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலங்கொடை, சமனலவெவ பிரதேசத்தில் வீட்டின் அருகே உள்ள காணியில் இருந்த குறித்த துப்பாக்கி வெடித்ததில், குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் , சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மின்சாரத் தொழில்நுட்பவியலாளராகப் (Electrician) கடமையாற்றி வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பலங்கொடை, சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















