சிட்னியின் பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சிட்னியின் பொண்டி கடற்கரையில் யூத சமூகத்தினரின் மத வழிபாட்டு நிகழ்வான ஹனுக்கா கொண்டாட்டத்தை இலக்காக வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிக்கிறது எனவும் அவுஸ்திரேலிய மக்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
















