கிழக்கு பசுபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மற்றொரு படகின் மீது புதன்கிழமை (17) அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க தெற்கு கட்டளை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் அமெரிக்க சேவை உறுப்பினர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க தெற்கு கட்டளை மேலும் தெரிவித்துள்ளது.
கிழக்கு பசுபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் என்று கூறப்படும் மூன்று படகுகளை அமெரிக்கா கடந்த திங்களன்று தாக்கி, அதிலிருந்த 8 பேரை கொன்றதைத் தொடர்ந்து, புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இந்த வாரத்தில் இரண்டாவது தாக்குதலாகும்.
போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ட்ரம்ப் நிர்வாகம் கூறியுள்ள ‘Operation Southern Spear’ என்று அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல்களில் இதுவரை குறைந்தது 99 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



















