ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பல்வேறு நபர்கள் செய்யும் நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் பொருட்களை கொள்முதல் கட்டளை (ஓர்டர) செய்வதற்கு முன், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றிய துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்களை சரிபார்க்க வேண்டும் என்று SLCERT இன் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த குறிப்பிட்டார்.
இதேவேளை, அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில நாட்களாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

















