போர்த்துக்கல் நகரமான தோமரில் (Tomar) 13 வயது பிரிட்டிஷ் சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் நேற்று (23) உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை நடத்திய நபர், உயிரிழந்த சிறுவனின் தாயாரின் முன்னாள் நண்பர் என்றும், கத்திக் குத்து தாக்குதலின் பின்னர் சம்பவம் நடந்த குறித்த வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் சிறுவன் மீதான கத்திக் குத்து தாக்குதலை தொடர்ந்து வேண்டுமென்றே எரிவாயு சிலிண்டரை வெடிக்கச் செய்து தனது உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் போது சிறுவனின் தாயாரும் காயமடைந்துடன், பின்னர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் உறுதிபடுத்தினர்.
போலிசியா நீதித்துறையின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்திய சந்தேக நபர் முன்னர் கொலைக் குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.















