கர்நாடகாவின் சித்ரதுர்கா (Chitradurga) மாவட்டத்தில் உள்ள ஹிரியூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 48 இல் இன்று (25) அதிகாலையில் கண்டெய்னர் லொறி ஒன்றும் சொகுசு பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
32 பயணிகளுடன் கோகர்ணாவுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து லொறியுடன் மோதியதில் தீப்பிடித்து எரிந்ததாகவும், இறந்தவர்களில் பெரும்பாலோர் வாகனத்திற்குள் உயிருடன் எரிந்து இறந்ததாகவும் உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் கூறியுள்னர்.
பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் உயிர் தப்பி தப்பினர்.
எனினும், லொறியின் சாரதியும் உதவியாளரும் உயிரிழந்தவர்களில் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
பெங்களூரை புனே மற்றும் மும்பையுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்துக்கு லொறி சாரதியின் அலட்சியமே காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


















