கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்வையிடுவதற்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று வரும் உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஒரு கைதிக்கு போதுமான உணவு அல்லது இனிப்புகளை கொண்டு வரலாம் என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையருமான ஜெகத் வீரசிங்க குறிப்பிட்டார்.
கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் பரிசுகள் மற்றும் விருந்துகளை பரிமாறிக்கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.















