வாழ்க்கைச் செலவு நெருக்கடியானது பாரம்பரிய பருவகால விற்பனைக்கு சவாலை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாக்ஸிங் டேயில் வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டை விட இன்று (26) ஒரு பில்லியன் பவுண்டுகள் குறைவாகச் செலவிடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொள்வனவில் வாடிக்கையார்கள் மிகவும் சிரமப்படுவதாக பிரித்தானியாவின் பல்கலை வங்கி நிறுவனமும் நிதி சேவை நிறுவனமுமான பார்க்லேஸின் (Barclays) கூறியுள்ளது.
அதனால், 2024 ஆம் ஆண்டு பாக்ஸிங் டேயில் 4.6 பில்லியன் பவுண்ட்ஸ்களாக இருந்த வர்த்தக செலவு, இந்த ஆண்டு 3.6 பில்லியன் பவுணட்ஸ்களாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு கவலைகள் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று பார்க்லேஸின் வங்கி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் அதாவது 26 சதவீதமானோர் இந்த ஆண்டு பாக்ஸிங் டேயில் செலவிடத் திட்டமிட்டுள்ளனர்.
இது 2024 இல் 28 சதவீதமாக இருந்தது.
இந்த ஆண்டு வாடிக்கையாளர்களின் விருப்பப் பட்டியலில் ஆடைகள், காலணிகள் மற்றும் ஆபரணங்கள் முதலிடத்தில் உள்ளன என்று பார்க்லேஸின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அதைத் தொடர்ந்து உணவு, பானம், அழகு சாதனப் பொருட்கள், வீட்டுப் பொருட்கள் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் பொருட்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




















