200 ஆண்டு காலமாக இலங்கையில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் சூறாவளி காரணமாகவும் தமது நிலங்களை இழந்து மிகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் பொது செயலாளர் சி. கா செந்தில் வேல் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
பொய் கூறி ஏமாற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்த மலையக மக்கள் ஒரு துண்டு காணிக்கை கூட உரிமை அற்றவர்களாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த கால ஆட்சியாளர்கள் மிகவும் வஞ்சனை செய்து தமது ஆட்சியை மேற்கொண்டார்கள்.
ஆனால் கடந்த மாதம் ஏற்பட்ட இயற்கை அனத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர் உயிர் சொத்துக்களை இழந்து உள்ளனர்.
அவர்களுக்கு அனுரகுமார திசாநாயக்க அவர்களான அரசாங்கம் உண்மையில் உதவி செய்ய வேண்டும்.
வெறுமனே 25000 ரூபாவை கொடுத்துவிட்டு அவர்களை ஏமாற்ற முடியாது.
அவர்கள் இழந்தது ஈடு கொடுக்க முடியாத உயிர்கள் சொத்துக்கள்.
இந்த அரசாங்கம் அவர்களுக்கு சொந்தமான நிலங்களை வழங்க வேண்டும் அவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.














