11.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு நபர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிரீன் சேனல் வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களில் ஒருவர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 37 வயதான தொழிலதிபர் ஆவார்.
மற்றொரு சந்தேக நபர் 26 வயதுடைய கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர்கள் இன்று அதிகாலை 3.00 மணிக்கு டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
சந்தேக நபர்கள் கொண்டு வந்த பொதிகளுக்குள் 378 அட்டைப் பெட்டிகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பதை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
சம்பவம் குறித்து விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















