கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமைக்காக சோஹாரா புஹாரி (Zohara Buhary) இன் கட்சியின் உறுப்பினர் பதவியை உடன் அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) இடைநிறுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிஜாம் காரியப்பர் வெளியிட்ட கடிதத்தில், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சி உறுப்பினர்களை எதிர்க்குமாறு தனிப்பட்ட முறையில் அறிவுறுத்திய போதிலும், கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு ஆதரவாக புஹாரி வாக்களித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவரது நடத்தை கட்சி ஒழுக்கத்தை கடுமையாக மீறுவதாக SLMC கடித்தில் விவரித்துள்ளது.



















