பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மோசமான அண்டை நாடுகளிடம் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரமையும் என்றது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று (02) தெரிவித்தார்.
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இதனைக் கூறிய அவர், பாகிஸ்தானையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்கும் உரிமையைப் பயன்படுத்தும் என்றும், பயங்கரவாதத்திற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்த வெளிப்புற பரிந்துரைகளை ஏற்காது என்றும் அவர் கூறினார்.
அத்துடன், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் எதிர்வினையை புது டெல்லி மட்டுமே தீர்மானிக்கும் என்று வெளியுறவு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.


















