2025 ஆம் ஆண்டில் சட்டவிரோதக் குடியேறிகளின் வருகை அதிகரித்துள்ளதால் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் பெரும் அரசியல் நெருக்கடியைச் சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
முந்தைய ஆண்டை விட படகுகள் மூலம் வருவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளமையானது
கடத்தல் கும்பல்களை ஒடுக்குவோம் என்ற அரசின் வாக்குறுதியைச் செயல்படுத்துவதில் உள்ள தோல்வியைப் பிரதிபலிக்கிறது.
இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் அரசைக் கடுமையாக விமர்சிப்பதோடு, ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவும் வலியுறுத்துகின்றன.
இருப்பினும், எல்லையைப் பாதுகாக்க புதிய சட்டங்கள் மற்றும் கடுமையான புகலிடக் கொள்கைகள் மூலம் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
இந்தச் சூழல் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு, தீவிர வலதுசாரி கட்சிகளுக்கான ஆதரவு பெருகவும் வழிவகுத்துள்ளது.


















