நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட சுமார் 170 கிலோ நிறையுடைய ஹெரொய்ன் புத்தளம் லாக்டோவட் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள எரியூட்டியில் வைத்து இன்று காலை எரித்து அழிக்கப்பட்டது.
சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த 170 கிலோ ஹெரோயின் இன்று அழிக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன தெரிவித்துள்ளார்.
புத்தளம் லாக்டோவட் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள எரியூட்டும் இடத்தில்இ நீதிபதி முன்னிலையில் போதைப்பொருள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் சிறப்பு அதிரடிப் படை வழங்கிய சிறப்புப் பாதுகாப்பின் கீழ்இ தலைமை நீதவான் நீதிமன்றத்திலிருந்து புத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி போதைப்பொருள் மீண்டும் புழக்கத்தில் வருவதைத் தடுப்பதற்கான சட்ட நடைமுறைகளின்படி கைப்பற்றப்பட்டவை இவ்வாறு அழிக்கப்பட்டு வருவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.















