“Dream Destination” திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட தல்பே ரயில் நிலையம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது
Clean Sri Lanka திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் “Dream Destination” திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்ட முதல் ரயில் நிலையமான தல்பே ரயில் நிலையத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் “Dream Destination” திட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் Clean Sri Lanka திட்டத்தால் தனியார் துறையின் ஆதரவுடன் அரச – தனியார் கூட்டு திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
நாட்டில் விசேட தேவைகள் உள்ள சமூகம் உட்பட அனைத்து பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்யும் ஒரு சுத்தமான, அழகான ரயில் நிலைய கட்டமைப்பை உருவாக்குதல் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
பிரதி அமைச்சர்களான ரத்ன கமகே, நளின் ஹேவகே, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அதிகாரிகள், ரயில்வே பொது முகாமையாளர் உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.














