வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை சிறைபிடித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் அறிவித்துள்ளார் .
அமெரிக்கா விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் வெனிசுவேலாவில் தலைநகரில் தொடர்வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடனள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தொடர்ச்சியாக தெரிவித்திருந்ததுடன் போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மடுரோ உடந்தையாக இருப்பதாக டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த பிண்ணனியில் அமெரிக்க கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட வெனிசுலாவின் கப்பல்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது
அமெரிக்காவின் இந்த செயற்பாட்டிற்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ, இதற்கு கடும் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன் அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதாக சவால் விடுத்திருந்தார்
இந்த பிண்ணனியில் வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று அதிகாலை பல இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதை அடுத்து, நகரம் முழுவதும் கடும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது
பல பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் கூடியுள்ளனர்
இதேவேளை வெனிசுலாவின் நிலப்பரப்பும் மக்களும் மீது அமெரிக்காவின் தற்போதைய அரசு மேற்கொண்ட இந்த மிகக் கடுமையான இராணுவத் தாக்குதலை, வெனிசுலா நிராகரிப்பதாக ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவின் அரசு தெரிவித்துள்ளது
தாக்குதலில் வெனிசுலா ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
இதனைத்தொடர்ந்து வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியும் அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்
வெனிசுலா மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளதுடன் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோவும், அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்
இந்த நிலையில், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு. ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது
நம்பிக்கையின் அடிப்படையில் உறவுகளை கட்டியெழுப்ப வேண்டும் என்பதுடன் வெனிசுலா மக்களுக்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவிப்பதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கையின் ஊடாக குறிப்பிட்டுள்ளது
இதனிடையே வெனிசுலா மீதான தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது.
கராகஸ் மீது ஏவுகணை தாக்குதல் விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என கொலம்பியாவின் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தாக்குதல் வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் செயல் என ஈரான் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெனிசுலா மீதான அமெரிக்காவிள் தாக்குதலுக்கு கியூபா, உள்ளிட்ட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பொருளாதார தடைகள், எண்ணெய் கப்பல்களின் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வெனிசுலாவை நெருக்கடிக்குள்ளாக்கும் முயற்சிகள் தொடர்ந்துவரும் நிலையில், இந்த தாக்குதல்கள் இலத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.














