வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவரின் உதவியாளர்கள் நால்வர் துப்பாக்கிகளுடன் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
தெஹிவல, கொஹுவல மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுகளில் கடந்த காலங்களில் கொலைகள் உட்பட பல குற்றச்செயல்களுக்கு இந்த துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்குற்றச்சாட்டுடன் தொடர்புடைய நிலையில் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள இரண்டு குற்றவாளிகளின் உதவியாளர்கள் நால்வர் கல்கிஸ்ஸை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள அவிஷ்க ஹேஷான் மற்றும் சுவா சமந்த ஆகிய இரண்டு குற்றவாளிகளின் உதவியாளர்கள் நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
இதேவேளை சந்தேக நபர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் உட்பட போதைப்பொருட்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆயுதங்களை வழங்கியமை தங்குமிடம் வழங்கியமை கொலை சம்பங்களுக்கு உடந்தையாக செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 3.8 ரிவால்வர் வகை துப்பாக்கிகள், 6 9 மிமீ நேரடி வெடிமருந்துகள், 06 3.8 வகை நேரடி வெடிமருந்துகள், சுமார் 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 50 கிராம் ஹொரைன், சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 55 கிராம் ஐஸ் மற்றும் 03 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தெஹிவல, கொஹுவல மற்றும் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுகளில் கடந்த காலங்களில் கொலைகள் உட்பட பல குற்றச்செயல்களுக்கு இந்த துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொஹுவல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.














