குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையினை தடுப்பதற்காக நடளாவிய ரீதியில் நேற்று (04) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதலில் பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய மொத்தம் 22 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 28,333 நபர்கள் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய 263 சந்தேக நபர்களும், பிடியாணை உத்தரவு நிலுவையில் உள்ள 141 நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தியக் குற்றச்சாட்டில் 424 பேர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

















