புத்தாண்டு தினத்தன்று தெற்கு (Gloucestershire) குளோசெஸ்டர்ஷையரில் உள்ள (Leyhill ) லெய்ஹில் சிறையிலிருந்து மூன்று கைதிகள் தப்பிச் சென்ற நிலையில் அவர்களில் (Aaron Thomas,) ஆரோன் தாமஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை,(Matthew Armstrong) மேத்யூ ஆம்ஸ்ட்ராங் மற்றும் (Daniel Washbourne, ) டேனியல் வாஷ்பர்ன் ஆகிய இருவரும் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
இதில் ஆம்ஸ்ட்ராங் ஒரு கொலைக்குற்றவாளி என்பதால், காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அவர்களைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தேடப்படும் நபர்களின் உடல் அடையாளங்கள் மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் குறித்த விரிவான தகவல்களைப் புலனாய்வு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்த இருவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதால், அவர்களைக் கண்டுபிடிக்க தேசிய அளவில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேவேளை, காவல்துறை தற்போது கண்காணிப்புப் பதிவுகளை ஆய்வு செய்து அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.



















