2026 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று (06) கூடவுள்ளது.
அதன்படி, நாடாளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய அமர்வின் போது கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், கடற்றொழிலாளர் ஓய்வூதிய, சமூகப் பாதுகாப்பு நலன்புரித் திட்டச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படவுள்ளது.
மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரேரணை அங்கீகரிக்கப்படவுள்ளது.
இது தவிர மாகாண சபைத் தேர்தல்கள் எந்த தோ்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவொன்றினை நியமிப்பதற்கான பிரேரணை – அங்கீகரிக்கப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் சபை நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
இதன் போது பல சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.














