மின்சாரக் கட்டணம் குறைப்பு தொடர்பில் அரசாங்கம் அளித்த வாக்குதியை நிச்சயம் நிறைவேற்றும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி உறுதியளித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையின்படி, 3 ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.
இதேவேளை, பேரிடர்களால் மக்கள் ஏற்கனவே சிரமப்பட்டு வரும் நேரத்தில், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கான திட்டங்கள் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது, எரிபொருள் அடிப்படையிலான மின் உற்பத்தியிலிருந்து சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர் மின்சாரம் போன்ற மலிவான புதுப்பிக்கத்தக்க மூலங்களுக்கு மாறி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணங்களை 30% குறைப்பதாக உறுதியளித்த போதிலும், அந்த உறுதிமொழிகளைக் கைவிட்டு மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் அவர் கூறினார்.
மின்சார கட்டணங்களை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவை கேள்விக்குட்படுத்தி, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் இன்று நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
















