(South Yorkshire ) தெற்கு யார்க்ஷயரில் நடந்த ஒரு கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்களை இங்கிலாந்து காவல்துறை தவறுதலாக மாற்றி கூறியமை அங்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், உயிருடன் இருந்த மற்றொரு இளைஞரின் குடும்பத்தினரிடம் அவர் இறந்துவிட்டதாக தவறான தகவல் பகிரப்பட்டது.
இந்த அடையாளக் குளறுபடி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, காவல்துறையினர் தங்களது தவறை ஒப்புக்கொண்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்த சுயாதீன காவல் கண்காணிப்பு அமைப்பிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தற்போது விபத்தில் உயிர் பிழைத்தவர் மற்றும் உயிரிழந்தவர்களின் உண்மையான அடையாளங்கள் முறைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய தவறு மீண்டும் நிகழாமல் இருக்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















