நாட்டின் பல மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசணத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்களுக்கு அமைவாக, ஊவா, கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களுக்குள் அமைந்துள்ள ஆற்றுப் படுகைகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, அனுராதபுரம், திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் உள்ள ஆற்றுப் படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆரம்பகட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த மாவட்டங்களுக்குள் உள்ள ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும், ஆறுகளுக்கு அருகாமையிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் இந்த ஆலோசனையை மிகுந்த பொறுப்புடன் எடுத்துக்கொண்டு தேவையான அனைத்து தயார்நிலை ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.














