கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்கான மத ஸ்தலங்களுக்கு 200க்கும் மேற்பட்ட மின்சாரப் பனல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்போது பாவனையற்ற நிலையில் காணப்படுவதாக வலுசக்கதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி சபையில் எழுப்பியிருந்த கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது பதில் வழங்கிய வலுசக்கதி அமைச்சர் குமார ஜெயக்கொடி,
வீதி விளக்குகளை பொருத்துவது பிரதேச சபைகளினால் முன்னெடுக்கப்படுகின்றது.
ஆனால் அவற்றிக்கான பொருட்களை விநியோகிப்பது மின்சாரசபையே
இதில் நீங்கள் கூறிய விடயம் தொடர்பாக நான் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும்.
மின்சாரத்தை வழங்குவது மாத்திரமே மின்சாரசபையின் பொறுப்பாகும்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பிரதேச சபையும் இணைந்தே இதனை மேற்கொள்கின்றன.
இதுவே பொதுவான விதியாக காணப்படுகின்றது.
கோவில்களுக்கு மின்சார கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகளை எழுத்து மூலம் தாருங்கள் அதனை பரிசீலிக்க முடியும்.
நாங்கள் ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்னர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் கிறிட் கொள்ளளவின் ஊடாக அவற்றை பெற்றுக்கொள்ளப்படவில்லை,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்கான இந்த மின்சார பனல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிறிட் கொள்ளளவின் அளவு காரணமாக தற்போது அதனை பொருத்த முடியாது உள்ளது.
இவ்வாறு 200 தொகுதிகள் கடந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ளன.
இவை யாருக்கும் பிரயோசனமற்கு காணப்படுகின்றது என தெரிவித்தார்.















