“தூய்மையான நாடும் ஆரோக்கியமான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் பேரிடருக்கு பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு மூன்று நாள் தேசிய வேலை திட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஜீவராணி சிவசுப்பிரமணியம் அவர்களின் ஒருங்கமைப்பில் ஆரம்பிக்கப்பட்டது. இவ் வேலைத் திட்டமானது நிந்தவூர் பிரதேச சபையும், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நாள் ஆரோக்கியமான சூழலுக்கான சமூக அளவிலான டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நிந்தவூர் 8,9 பிரிவில் வீடுகள், வணிகக் கட்டிடங்கள், பொது கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்றவை டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு டெங்கு பற்றிய விழிப்புணர்வு அறிவித்தல்களும் வழங்கப்பட்டதுடன் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் உள்ள இடங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை அனுசரணையுடன் புகை விசிறல் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டது.














