பிரித்தானியாவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி மீதான தடையை நீக்கும் புதிய சட்டத்தை நிதியமைச்சர் Rachel Reeves இன்று அறிமுகப்படுத்துகிறார்.
இந்நிலையில், இந்தக் கொள்கை தொடர்பாக நைஜல் ஃபரேஜ் (Nigel Farage) தெரிவித்த கருத்துகள் பெரும் அரசியல் புயலை கிளப்பியுள்ளன.
பிரித்தானிய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்பட வேண்டும் என Nigel Farage கூறியிருந்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள Rachel Reeves, “குழந்தைகளின் தோலின் நிறத்தைப் பார்த்து அவர்களை வறுமையில் வைத்திருக்க Farage துடிக்கிறார்” எனச் சாடியுள்ளார்.
“வெள்ளையின குழந்தைகளுக்கு மட்டும் சலுகை, மற்றவர்களுக்கு கிடையாது” என்ற பிரிவினைவாத அரசியலை பிரித்தானியா ஒருபோதும் ஏற்காது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சட்டத்தின் மூலம் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் வறுமையிலிருந்து மீட்கப்படுவார்கள் எனத் தொழிலாளர் கட்சி அரசு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ள இந்த மாற்றத்தை முடக்க கன்சர்வேட்டிவ் (Conservatives) மற்றும் Reform UK கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மக்களின் ஆதரவைத் திரட்ட நிதியமைச்சர் Rachel Reeves தீவிரமாகப் போராடி வருகிறார்.




















