இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
சீன மக்கள் குடியரசு நாட்டிற்கு 11.484 மில்லியன் மீற்றர் துணியை நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும் இதுவரை அனைத்து துணி கையிருப்புகளும் துறைமுகத்தில் பெறப்பட்டுள்ளன. சீருடைகளை நன்கொடையாக வழங்குவதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி அன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த ஆண்டு, சுமார் 4,418,404 மாணவர்கள் பாடசாலை சீருடைகளைப் பெற தகுதியுடையவர்கள், மேலும் 19ஆம் திகதி முதல் துணி கையிருப்புகளை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.















