நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா தயாரித்து சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘மா இன்டி பங்காரம்.
இந்தப் படத்தை ராஜ் நிடிமோரு கதை எழுதியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப் படத்தில் கௌதமி, மஞ்சுஷா, திகந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
அமைதியாக இருக்கும் சமந்தா ஆக்ரோஷமடைந்து ஆக்ஷன் செய்யும் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
















